தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான நிலையில், அது புயலாக மாறக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த நிலையில், தூத்துக்குடி நகரின் பல்வேறு இடங்களில் கரு மேகங்கள் சூழ்ந்து பலத்த மழை பெய்தது.