செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை முதல் கனமழை பெய்ததால் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகனங்கள் சென்றன. அதிகாலை முதல் மதுராந்தகம், மேல்மருவத்தூர், அச்சரப்பாக்கம், சோத்துப்பாக்கம், செய்யூர், சித்தாமூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வாகனங்கள் மெதுவாகவும், முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியும் சென்றன. மேலும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.