விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. ஆரோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான வானூர், பொம்மையார்பாளையம், மொரட்டாண்டி, இடையஞ்சாவடி, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இதனால் சுற்றுலா தலமான ஆரோவில்-க்கு செல்லும் சாலைகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமமடைந்து வருகின்றனர். இந்நிலையில் நீர் நிலைகள் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.