விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் விடிய விடிய பெய்த கனமழையால் புதிய பேருந்து நிலைய சாலையில் மழைநீர் காட்டாற்று வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து தடைபட்டு வாகன ஓட்டிகள் மற்றும் தீபாவளிக்கு ஊர் திரும்பிய பயணிகள் கடும் அவதி அடைந்தனர். வெள்ளத்தில் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்று அடித்து செல்லப்பட்ட நிலையில் ராஜபாளையம் லட்சுமிபுரம் பகுதியில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்ததோடு கூலி தொழிலாளியின் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.