பெரம்பலுர் மாவட்டம் குன்னம் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக சாலைகளில் குளம் போல் மழை நீர் தேங்கியுள்ளது. அக்டோபர் 13 மற்றும் 14-ஆம் தேதிகளில் பெரம்பலூர் மாவட்டத்தில் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் கணித்தது. இந்நிலையில், குன்னம் சுற்றுவட்டார பகுதிகளான வேப்பூர், வயலூர், வயலப்பாடி, கிழுமத்தூர், வீரமநல்லூர்,காளிங்கராய நல்லூர் மற்றம் வசிஷ்டபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்ததது. நல்லூர் கிராமத்தில் மரத்தில் இடி விழுந்து, அதில் கட்டப்பட்டிருந்த இரண்டு கறவை மாடுகள் பரிதாபமாக உயிரிழந்தன.