வேலூர் மாவட்டம் குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழை காரணமாக, பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது. கழிவு நீருடன் மழை நீரும் கலந்ததால் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதிப்பட்டனர். மேலும், மாலை நேரத்தில் பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவர்கள் மழையில் நனைந்தபடியே சென்றனர்.