சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழையால் சாலையோர வியாபாரிகள் அவதியடைந்தனர். காரைக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான அரியக்குடி, கோவிலூர், ஸ்ரீராம் நகர், பள்ளத்தூர், கானாடுகாத்தான், மானகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் ஆயுத பூஜைக்காக சாலையோரம் பொருட்கள் விற்பனை செய்து கொண்டிருந்த வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.