நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு பெய்த கனமழையால் மாடல் ஹவுஸ் பகுதியில் படிகட்டுகள் வழியாக மழைநீர் அருவி போல் வழிந்தோடியது. குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் மரங்கள் சாய்ந்து, மண் சரிவு ஏற்பட்ட நிலையில், மாடல் ஹவுஸ் பகுதியில் படிகட்டுகள் வழியாக மழைநீர் வழிந்தோடியது. மேலும் வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்ததால் மக்கள் அவதியடைந்தனர்.