நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட திருப்பூண்டி உள்ளிட்ட பல்வேறு கடலோர கிராமங்களில், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வெளுத்து வாங்கிய கனமழையால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். காலை 6 மணி அளவில் மிதமான மழையுடன் துவங்கி, இடைவிடாமல் பெய்து வந்த நிலையில், தொடர்ந்து மழை வெளுத்து வாங்கியது. வேளாங்கண்ணி, பிரதாபராமபுரம், திருப்பூண்டி, காமேஸ்வரம், மேலப்பிடாகை, மகிழி, சோழவித்தியாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் மழை வெளுத்து வாங்கியது. இந்த மழை விவசாயத்திற்கு உகந்தது என, விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.