திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழையால், கிராம பகுதிகளுக்கு செல்லும் சாலைகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. நடுவச்சேரி கிராமப் பகுதிகளில் உள்ள குளம் மற்றும் குட்டைகள் நிறைந்து வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. நடுவுச்சேரியில் இருந்து கருக்கன்காட்டுப்புதூர் வழியாக துலுக்கமுத்தூர், நம்பியூர் கிராமங்களுக்கு செல்லும் சாலைகளில் மழைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் அந்த கிராமங்களுக்கான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோல செம்மாண்டம்பாளையம் குளம் நிறைந்து தடுப்பணை வழியாக மழை நீர் வெளியேறி வருகிறது.