தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்ததால் வஞ்சி ஓடை மற்றும் ரெட்டை வாய்க்கால் ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டது. மேலும் குடியிருப்பு பகுதிக்குள் மழைநீர் புகுந்தது.சீனி முகமது நகரில் உள்ள 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் நீர் சூழ்ந்தால் மக்கள் மிகவும் அவதிப்பட்டனர். காவலர் குடியிருப்பு பகுதி மற்றும் தீயணைப்பு துறை அலுவலகத்தை சுற்றிலும் மழைநீர் சூழ்ந்து கொண்டதால் அங்கு வசிப்பவர்கள் சிரமத்திற்குள்ளாகினர்.