மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் வெளுத்து வாங்கிய கனமழையால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். திடீரென ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால், சாலையில் ஒரு அடி உயரத்திற்கு மழைநீர் தேங்கியதால், அந்த வழியாக வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டன.