விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித்தீர்த்தது. இதன் காரணமாக, அங்குள்ள நகராட்சி பள்ளி வளாகத்தில் மழை வெள்ளம் தேங்கியதால் மாணவர்கள் அவதிக்குள்ளாகினர்.