வேலூரில் பெய்த கனமழையின் காரணமாக பாதாள சாக்கடை கழிவு நீர் வெளியேறி சாலையில் ஓடியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை வெளுத்து வாங்கியதால், தோட்டப்பாளையம் பகுதியில் உள்ள பாதாளச்சாக்கடையில் இருந்து குபு குபுவென கழிவு நீர் வெளியேறியது. மழை நீரோடு கழிவு நீர் கலந்து சாலையில் தேங்கியதால் , போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது.