ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே, புஞ்சை புளியம்பட்டியில் சுமார் 2 மணி நேரமாக பெய்த தொடர் கனமழையின் காரணமாக, நம்பியூர் செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. மழைநீருடன் கழிவுநீரும் கலந்து வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள்.