ஈரோடு மாவட்டம், தாளவாடி அருகே தலமலை வனப்பகுதியில் பெய்த கன மழையின் காரணமாக, தரைப் பாலத்தை காட்டாற்று வெள்ளம் மூழ்கடித்து சென்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தாளவாடி அருகே தலமலை, ராமர் அணை உள்ளிட்ட வனப் பகுதிகளில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது. இந்த கனமழையின் காரணமாக, வனப்பகுதியில் உள்ள ஓடைகளில் திடீரென வெள்ளம் ஏற்பட்டது. செந்நிற மழை நீர் ஓடைகளில் ஆர்ப்பரித்து சென்றது. ராமர் அணைப் பகுதியில் உள்ள தரைப் பாலத்தை காட்டாற்று வெள்ளம் மூழ்கடித்து சென்றதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.