கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இரவு நேரத்தில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. காலை முதல் வெப்பத்தின் தாக்கம் சற்று அதிகமாக இருந்த நிலையில், இரவில் திடீரென கனமழை பெய்ததால் பொது மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.