கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் இரவில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக கனமழை வெளுத்து வாங்கியதால் வெப்பம் தணிந்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கிருஷ்ணகிரி, குந்தாரப்பள்ளி, வேப்பனப்பள்ளி, தீர்த்தம், நேரலகிரி,குருபரப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் தென் பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.