நாகப்பட்டினம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 5 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை வெளுத்து வாங்கியது. நாகப்பட்டினம் மாவட்டத்தில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. இந்நிலையில், மீண்டும் காலை முதலே கீழ்வேளூர், காக்கழனி, திருமருகல், திட்டச்சேரி நாகூர், வெளிப்பாளையம், புத்தூர், வேளாங்கண்ணி உள்ளிட்ட நகர் பகுதிகளிலும், மணலூர், செருநல்லூர், குருமனாங்குடி, கூத்தூர், கலசம்பாடி உள்ளிட்ட கிராம பகுதிகளிலும் இடைவிடாது மழை பெய்தது. இதனால் ஆங்காங்கே சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.