நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக சேலம் மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளது. நேற்றைய நிலவரப்படி மேட்டூர் அணைக்கு 17ஆயிரத்து586 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில், இன்று காலை 29ஆயிரத்து850 கன அடி உயர்ந்துள்ளது. ஆகையால் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து 100 அடியை எட்டியுள்ளது.நடப்பாண்டில் இரண்டாவது முறையாக மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.