செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சுற்று வட்டாரப் பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் பெய்த கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். மதுராந்தகம், மேல்மருவத்தூர், கருங்குழி, சித்தாமூர் ஆகிய பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.