சென்னை விமான நிலைய சுற்று வட்டார பகுதிகளில் சாரல் மழையுடன் கூடிய பலத்த காற்று வீசியதால், 8 இண்டிகோ விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்தன. சென்னை புறநகர் பகுதியில் திடீரென பலத்த காற்றுடன் கூடிய சாரல் மழை பெய்தது. இதன் காரணமாக, டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத், கோவை உள்ளிட்ட நகரங்களில் இருந்து சென்னை வந்த 8 இண்டிகோ விமானங்கள் தரையிறங்க முடியாமல் சுமார் 15 முதல் 30 நிமிடங்கள் வரை வானில் வட்டமடித்தன. ஓடுபாதையின் ஈரப்பதத் தன்மை மற்றும் காற்றின் வேகத்தை பொறுத்து, ஒன்றன் பின் ஒன்றாக விமானங்கள் தரையிறக்கப்பட்டதாக, விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.