கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே பலத்த காற்றுடன் பெய்த கனமழையில் லாரி குடோன் தகர கொட்டகையின் மேற்கூரை அடித்துச் செல்லப்பட்ட வீடியோ வெளியாகி உள்ளது. கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை கனமழை பெய்த நிலையில், மோளையாண்டிபட்டி கிராமத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதில், பாண்டியராஜ் என்பவருக்கு சொந்தமான லாரி குடோனில் பொருத்தப்பட்ட தகர கொட்டகையின் மேற்கூரை காற்றில் அடித்துச் செல்லப்பட்டது.