ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் பலத்த சூறைக்காற்றால், நங்கூரம் அறுந்து விசைப்படகுகள், கரை தட்டியதால் மீனவர்கள் வேதனை அடைந்தனர். ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் 700க்கும் மேற்பட்ட விசைப்படகில் 2500க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இரவு வீசிய பலத்த சூறைக்காற்றில், நங்கூரமிட்டு நிறுத்தி இருந்த விசைப்படகுகள், ஒன்றுடன் ஒன்று மோதி சேதமடைந்தன. ஒரு விசைப்படகு முற்றிலும் சேதமடைந்தது. இதனால், பெரும் இழப்பை சந்தித்துள்ள மீனவர்கள், தூண்டில் வளைவு அமைத்து தர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். இதையும் பாருங்கள் - Ramnad Rain News | Boat Damage | வீசிய சூறைக்காற்று, நொறுங்கிய படகுகள், மீனவர்கள் வேதனை