திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால், பக்தர்கள் புனித நீராட தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், கடந்த இரண்டு நாட்களாக திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மேலும் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சுப்ரமணிய சுவாமி கோயில் அருகே கடலானது, சீற்றத்துடன் காணப்படுகிறது. ஆக்ரோஷமான அலைகள் வருகிறது. இதனால் கடல் நீர் சுமார் 20 அடி வெளியே வந்துள்ளது. இதனால், பக்தர்களின் பாதுகாப்பு நலன் கருதி, கோயில் நிர்வாகம் கடலில் புனித நீராட தற்காலிக தடை விதித்துள்ளது. கோயில் நிர்வாக கடல் பக்தர் பாதுகாப்பு குழுவினர் பக்தர்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.