திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இரவு முழுவதும் தொடர் சாரல் மழை பெய்த நிலையில் காலையில் கடும் பனிமூட்டம் நிலவியது. கொடைக்கானலில் கடந்த 3 நாட்களாக வறண்ட வானிலை நிலவி வந்த நிலையில், கடும் பனி பொழிந்தது. மலைச்சாலையில் எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவுக்கு பனிமூட்டம் இருந்ததால் முகப்பு விளக்குகளை எரியவிட்டப்படி வாகன ஓட்டிகள் சென்றனர்.இதையும் படியுங்கள் : எச்ஐவி தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி