திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் சுவர் விளம்பரம் எழுதுவதில் திமுக மற்றும் பாஜகவினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து அனுமதியின்றி கட்சி விளம்பரம் எழுதியதாக கூறி, இரு கட்சியினர் எழுதிய சுவர் விளம்பரத்தை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நகராட்சி நிர்வாகத்தினர் அழித்தனர்.