இந்தோனேசியாவை சேர்ந்த பெண்ணை நாகையை சேர்ந்த இளைஞர் காதலித்து தமிழ் கலாச்சார முறைப்படி கரம்பிடித்துள்ளார். கீச்சாங்குப்பம் பகுதியை சேர்ந்த ஜெசிந்த்குமார் சிங்கப்பூரில், கப்பல் கட்டும் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த நிலையில் அதே நிறுவனத்தில் பணிபுரிந்த இந்தோனேசியாவை சேர்ந்த கிரேஸ் வீல்டி ராபா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் இருவீட்டாரின் சம்மதத்துடன் நாகையில் திருமணம் நடைபெற்றது.