கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்படும் நீர் இரசாயன நுரை பொங்கிய படி செல்கிறது. அணையிலிருந்து விநாடிக்கு 699 கன அடி நீர் திறக்கப்படும் நிலையில், தண்ணீரே தெரியாத அளவுக்கு ஆற்றில் அடர்ந்த நுரை படர்ந்துள்ளது. வழக்கமாக மழைக்காலங்களில் மட்டுமே நுரையுடன் பாயும் ஆற்றில், மழை இல்லாத போதும் இதே நிலை தொடர்வதால் விவசாயம் பாதிக்கும் என விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.இதையும் படியுங்கள் : கரும்பு தோட்டத்திற்குள் புகுந்த யானை கூட்டம்