கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே அரசு துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகியும் பயன்பாட்டிற்கு வரவில்லை என மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். எருமனூர் பகுதியில் பட்டியலினத்தவர் வசிக்கும் பகுதியில் அரசு துணை சுகாதார நிலையம் திறக்கப்படாமல் உள்ளதால் அவசர மருத்துவ சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டியதாக மக்கள் புகார் தெரிவித்தனர்.