நாகையில், சொந்த சகோதரியின் மகளுக்கே பாலியல் தொல்லை கொடுத்த தலைமை காவலரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். ஆழியூரை சேர்ந்த தலைமை காவலர், அடிக்கடி தனது சகோதரியின் வீட்டுக்கு சென்று வந்த நிலையில், சகோதரி மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட அச்சிறுமி, குழந்தைகள் நல குழுமத்தில் புகார் அளித்ததையடுத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். தலைமைக்காவலர், திட்டச்சேரி காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருபவர். பாதிக்கப்பட்ட பிளஸ்-டூ படிக்கும் அந்த மாணவி, நாகப்பட்டினம் குழந்தைகள் நலக் குழுமத்தில் புகார் அளித்தார். இதை தொடர்ந்து, அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஏட்டுவை கைது செய்தனர்.