தூத்துக்குடி அருகே சாதியை காரணம் காட்டி பணி செய்ய விடாமல் மக்கள் தடுப்பதாக பஞ்சாயத்து தலைவர் கூறிய புகாரால் பரபரப்பு ஏற்பட்டது. மேல அரசடி ஊராட்சி தலைவராக இருக்கும் டாக்டர் ரோகினிராஜ், இங்குள்ள ஆழ்துளைக் கிணற்றில் இருந்து புளியமரத்து அரசடி கிராமத்துக்கு குடிநீர் கொண்டு செல்வதற்காக ஏற்பாடு செய்தபோது, கிராம மக்கள் தடுத்து நிறுத்தினர்.