சென்னையில் ஜெபம் செய்வதாக கூறி, 17 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக, போக்சோ சட்டத்தின் கீழ் ஐடி ஊழியர் கைது செய்யப்பட்டார். பெரம்பூர் செம்பியம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் 40 வயதான கந்தசாமி என்பவர், அதே குடியிருப்பு வீட்டில் வசித்து வரும் 17 வயது சிறுமியை அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவரது பிடியில் இருந்து தப்பி வந்த சிறுமி, தமது பெற்றோரிடம் நடந்த சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார். பெற்றோர் அளித்த புகாரின் பேரில், கந்தசாமியை போலீசார் கைது செய்தனர்.