தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்கள் மத்தியில் ஏதாவது பேச வேண்டுமே என்பதற்காக பேசிக் கொண்டிருப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். திருச்சி அரியமங்கலத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாமை துவக்கி வைத்து, பொதுமக்களுடன் அன்பில் மகேஷ் கலந்துரையாடினார். பிறகு செய்தியாளரை சந்தித்த அவர், உதயநிதி ஸ்டாலின் திமுகவில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட இளம் தலைவராக உள்ளதாகவும், திமுகவில் நடப்பவை குறித்து எடப்பாடி பழனிசாமி கவலைப்படத் தேவையில்லை எனவும் கூறினார்.