நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சி பூங்கா அருகே சாலையை கடக்க முயன்ற மூதாட்டி பைக் மோதி தூக்கி வீசப்பட்ட நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. காவிரி நகர் பகுதியைச் சார்ந்த 75 வயதான லட்சுமி நகராட்சி பூங்காவில் தற்காலிக தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், டீ குடிக்க சாலையை கடந்த போது வேகமாக வந்த பைக் மோதி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் பைக்கில் சென்ற இருவரும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதையும் படியுங்கள் : நடிகர் சூர்யாவின் 45வது படத்திற்கு ”கருப்பு” என தலைப்பு... இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி பிறந்தநாளை ஒட்டி அறிவிப்பு