அதிகாரத்தில் பங்கு வேண்டும்: அதிகாரத்தில் பங்கு தரும் கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டும்": காங்கிரஸ் மீட்புக் குழு என்ற பெயரில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசியலில் கூட்டணி மற்றும் ஆட்சி அதிகாரப் பகிர்வு குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், காங்கிரஸ் மீட்புக் குழு என்ற பெயரில் ஒட்டப்பட்ட சில அதிரடி போஸ்டர்களாலும், அதில் சில கிழிக்கப்பட்டதாலும் அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.போஸ்டரில் இடம்பெற்ற வாசகங்கள்அதிகாரமற்ற அரசியல் அர்த்தமற்ற அரசியல்!ஆட்சி அதிகாரத்தில் பங்கு தரும் கட்சியுடனே கூட்டணி வேண்டும்!அகில இந்திய தலைமையே புரிந்து கொள்தன்மானத்தையும் சுயமரியாதையையும் இழந்து கூட்டணி வேண்டாம்!போன்ற வாசகங்கள், தற்போதுள்ள கூட்டணி சூழலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சி அதிகாரத்தில் உரிய பங்கு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை பகிரங்கமாக முன்வைப்பதாக அமைந்துள்ளன.சில போஸ்டர்கள் கிழிப்பு இந்த போஸ்டர்கள் இன்று மாலை காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் முகப்பேரில் உள்ள மண்டபம் அருகே ஒட்டப்பட்டிருந்த நிலையில், சில போஸ்டர்கள் அடையாளம் தெரியாத நபர்களால் கிழிக்கப்பட்டுள்ளன. இதனால் அந்தப் பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. Related Link செல்வாக்கு இல்லாத செல்வப்பெருந்தகை