நாகை மாவட்டம் நாகூர் ஆண்டவர் தரிசித்த மஹான் ஹஜ்ரத் ஹாஜி ஹாதி நூர் ஷா ஒலியுல்லாஹ் தர்ஹாவின் சந்தனக்கூடு விழாவில் திரளான இஸ்லாமியர்கள் பங்கேற்று சிறப்பு வழிபாடு நடத்தினர். விழாவையொட்டி, நாகூர் ஆண்டவர் தர்காவில் இருந்து சந்தனம், புனித போர்வை, அலங்காரப்பூ ஆகியவை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு தர்காவில் புனித போர்வை சாற்றப்பட்டு, சந்தனம் பூசுப்பட்டது.