கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் மணிலா அறுவடை தொடங்கியது. கடந்த கார்த்திகை மாதத்தில் பயிரிடப்பட்ட பயிர்கள், தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளன. ஆனால், ஆட்கள் பற்றாக்குறை காரணமாக இயந்திரங்களை கொண்டு, மணிலாவினை பிரித்து எடுத்து வருவதால் கூடுதல் செலவாகியுள்ளதாக, விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.