சென்னை திருவொற்றியூரில் உள்ள கேஎப்சி உணவகத்தில் வாங்கிய சிக்கனில் தலைமுடி கிடந்ததால் அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர் இது குறித்து புகார் அளித்துள்ளார். திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள அவர், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.