ராமநாதபுரம் பரமக்குடிக்கு நினைவஞ்சலி செலுத்த சென்ற பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவின் வாகனத்தை போலீஸார் தடுத்ததால் இரு தரப்பினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட பரமக்குடி பாஜக பிரமுகர் தேங்காய் கடை முருகனுக்கு நினைவஞ்சலி செலுத்த நிர்வாகிகளுடன் காரில் சென்றபோது, சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் போலீஸார் தடுத்து நிறுத்தினர்.