கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் வழியாக ஈச்சர் லாரியில் தனி அறை அமைத்து கடத்தி வரப்பட்ட ஒரு டன் அளவிலான குட்கா போதைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பூனப்பள்ளி சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்ட மத்திகிரி போலீசார், கர்நாடகாவிலிருந்து ஒசூர் நோக்கி வந்த ஈச்சர் லாரியை சோதனையிட்ட போது, லாரி ஓட்டுநர் திடீரென ஓட்டம் பிடித்தார். இதனால் வாகனத்தை தீவிரமாக சோதனையிட்ட போது, அதில் தனி அறை அமைத்து ஒரு டன் அளவிலான குட்கா போதைப் பொருட்களை கடத்தி வந்தது தெரிய வந்தது. லாரியுடன் குட்கா பொருட்களை கைப்பற்றிய போலீசார் தப்பியோடிய ஓட்டுநரை தேடி வருகின்றனர்.