கன்னியாகுமரியில் தொடரும் மழை காரணமாக கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு திற்பரப்பு அருவியில் தடுப்புகளை தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. பேச்சிப்பாறை அணையில் இருந்து விநாடிக்கு 500 கன அடி நீர் திறக்கப்படுவதால் கோதையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை இரண்டாவது நாளாக தொடர்கிறது.இதையும் படியுங்கள் : மத்திய குழுவினர் வருகை ரத்தானதால் உழவர்கள் அதிருப்தி