சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரி நிர்வாகம் அதிக கட்டணம் வசூலிப்பதாக கூறி மாணவி ஒருவர் எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கல்லூரியில் பிஏ எக்கனாமிக்ஸ் 3 ம் ஆண்டு படித்து வருபவர் மாணவி லோகேஸ்வரி. அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் கேட்டு ஹால் டிக்கெட் தர மறுப்பதாக கூறி எலி மருந்தை சாப்பிட்டு மயக்கமடைந்தார். உடனடியாக அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதிக கட்டண வசூல் குறித்து உயர் கல்வித் துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை மாணவியின் தாய் குற்றம்சாட்டினார்.