ஈரோடு மாவட்டம் அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு மகிஷாசூரமர்த்தனம் வெகு விமர்சையாக நடைபெற்றது. அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நடப்பாண்டு குண்டம் திருவிழா கடந்த 20 ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து மகிஷாசூரமர்த்தனம் எனும் கிடா பலி கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. இவ்வாறு செய்வதால் குண்டம் மற்றும் தேர் திருவிழா எந்தவித தங்குதடையும் இன்றி நடைபெறும் என நம்பப்படும் நிலையில், இதில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.