திருப்பூர் தொழிலதிபரிடம் 6 கோடியே 36 லட்சம் ரூபாய் மோசடி செய்த குஜராத் ஆசாமியை திருப்பூர் மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். திருப்பூர் ஷெரீக் காலனியை சேர்ந்த சித்தார்த்குமார் சலேச்சா என்பவரின் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் காடா துணி கொள்முதல் செய்து விட்டு ஏமாற்றிய குஜராத் மாநிலம் அகமதாபத்தை சேர்ந்த ரிஷப் பண்டாரியை, மும்பையில் கைது செய்தனர்.