வட கிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள, கடலூர் மாவட்ட காவல் துறையை சேர்ந்த 130 காவலர்கள், பேரிடர் மேலாண்மை பயிற்சி பெற்று தயார் நிலையில் உள்ளனர். எதிர்வரும் பருவமழையை எதிர்கொள்ள காவல்துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது அந்த வகையில், மழையால் பாதிக்கப்பட்டவர்களை மீட்க பேரிடர் மேலாண்மை துறையில் பயிற்சி பெற்ற காவல் துறையினர் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள், கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் எங்கு காவல்துறை உதவி தேவைப்படுகிறது என அறிந்து அங்கு இவர்கள் பணி அமர்த்தப்படுவார்கள். படகு, மின் விளக்கு, மரம் அறுக்கும் இயந்திரம் உள்ளிட்ட 22 வகையான உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளது.