வரதட்சனை கேட்டு மனைவியை அடித்து துன்புறுத்திய வழக்கில் கைதான காவலர் சிறையில் அடைக்கப்பட்டார். வரதட்சனை கொடுமைக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த இளம்பெண் அளித்த புகாரில், அவரது கணவர் பூபாலன், மாமனாரும் சாத்தூர் காவல் ஆய்வாளருமான செந்தில்குமரன், மாமியார் விஜயா, நாத்தனார் அனிதா ஆகியோர் மீது வழக்கு பதியப்பட்டிருந்தது.