மதுரை மாவட்டம் தனக்கன்குளம் பகுதியில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் GST பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். மதுரை தெற்கு மாவட்ட திமுக மகளிர் அணி அமைப்புச் செயலாலராக இருக்கும் கிருத்திகா தங்கபாண்டி, ஆசிஸ் டெக் என்ற பெயரில் ஐடி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் கோடிக்கணக்கில் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக வந்த புகாரை அடுத்து ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதனை அறிந்து நிறுவனத்தின் உரிமையாளர்கள் தலைமறைவானதாக கூறப்படுகிறது.