திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஒரு கோடியே 61 லட்சம் ரூபாய் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் என கூறி நோட்டீஸ் வந்ததால், டீ கடையில் வேலை பார்த்து வரும் நபர் அதிர்ச்சி அடைந்தார். சென்னையில் எஸ்.ஆர்.எஃப் என்ற பெயரில் பார்சல் சர்வீஸ் நடத்தியதாகவும், ஆகவே 4 ஆண்டுகளுக்கான ஜிஎஸ்டி வரி கட்டவேண்டும் எனவும் கூறி, முகமது பைஜான் வீட்டிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.