திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே, சாயப்பட்டறை கழிவுகளால் நிலத்தடி நீர் மாசடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். அணைப்பாளையம் பகுதியில் சாய ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும் சாயக் கழிவுகளால் நிலத்தடி நீர் மாசடைந்துள்ளது. இதனால், விவசாய கிணறுகளில் தண்ணீரின் நிறம் மாறி விட்டதாகவும், உப்புத்தன்மை அதிகரித்துள்ளதாகவும் விவசாயிகள் புகார் தெரிவித்தனர். தண்ணீரில் கடினத்தன்மை அதிகரித்துள்ளதால் பயிர்கள் கருகுவதாகவும், கால்நடைகள் கூட தண்ணீரை குடிக்க முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கவலை தெரிவித்தனர். இதற்கு காரணமான சாய ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.